Skip to main content

தி கேரளா ஸ்டோரி பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

The Kerala Story director Sudipto Sen hospitalised

 

ஆஸ்மா (2018) மற்றும் தி லாஸ்ட் மாங்க் (2006) மற்றும் தி கேரளா ஸ்டோரி (2023) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுதிப்தோ சென். சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது ரூ.200 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்நிலையில் இயக்குநர் சுதிப்தோ சென் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருக்கும் இவர் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாகவும் பேசப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சியில் திரையுலகம்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
varushamellam vasantham director incident happened

கடந்த 2002ஆம் ஆண்டில் வெளியான படம் வருஷமெல்லாம் வசந்தம். இப்படத்தில், இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், குணால், அனிதா ஹாசனந்தானி, எம்.என்.நம்பியார் ஆகியோர்  நடித்திருந்தனர்.  சிற்பி இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடலாக அமைத்திருந்தது. இன்றளவும் அந்தப் பாடல்கள் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை இயக்குநர் ரவிசங்கர் இயக்கியிருந்தார். காதல் படமாக உருவாக்கப்பட்டிருந்த இப்படம், தமிழில் பெரிய வெற்றியைப் பெற்றது. 

பிரபல இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்த ரவிசங்கர், விக்ரமன் இயக்கிய ‘சூரிய வம்சம்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘ரோசாப்பூ.. சின்ன.. ரோசாப்பூ’ பாடலை எழுதியிருந்தார். அதன் பிறகு, தான் இயக்கிய வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களில், 5 பாடல்களுக்கும் ரவிசங்கரே வரிகள் எழுதியிருந்தார். குறிப்பாக, ‘எங்கே அந்த வெண்ணிலா’,  ‘அடி அனார்கலி’ போன்ற பாடல்கள் இளைஞர்கள் மனதில் கிளாசிக் பாடலாக அமைந்தது. 

வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு பிறகு எந்தப் படத்தையும் இயக்காமலும், திருமணம் செய்யாமலும் சென்னையில் இயக்குநர் ரவிசங்கர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (12-04-24) இரவு தனது அறையில் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“நிலையற்ற வாழ்வில் அவரது மறைவு பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது” - சரத்குமார் இரங்கல்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
sarathkumar condolence message for director surya prakash passed away

ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் 1996ஆம் அண்டு வெளியான மாணிக்கம் படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து சரத்குமாரை வைத்து மாயி மற்றும் திவான் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவன் நடித்த அதிபர் மற்றும் தெலுங்கில் ராஜசேகர் நடித்த பாரதசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வருசநாடு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். இந்த படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைந்துள்ளார். மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவுற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.