Skip to main content

“32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” - படக்குழு மீது வழக்குப்பதிவு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

kerala police filed case against 'the kerala story' movie teaser issue

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் நடிப்பில் அறிமுகமானார். 

 

'தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த டீசரில் ஹிஜாப் அணிந்து வரும் ஒரு பெண், தான் பிற மதத்திற்கு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தள்ளப்பட்டுள்ளேன். இதே போல் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக அந்தப் பெண் தெரிவிக்கிறார். இந்த டீசர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  

 

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் எனக் கூறி கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வி.டி.சதீசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நானும் அந்த டீசரைப் பார்த்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களின் முன் கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனைத் தடை செய்ய வேண்டும்" எனப் பேசினார். 

 

இந்நிலையில், கேரள மாநில டிஜிபி ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு திருவனந்தபுரம் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படத்தில் கேரளாவைப் பயங்கரவாதிகளின் இருப்பிடம் போல் சித்தரித்துள்ளதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ஃபகத் ஃபாசில் படம் 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
fahad faasil aavesham movie enters 100 crore club

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், சஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். நஸ்ரியா நசிம் மற்றும் அன்வர் ரஷீத் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் நடிப்பை சமந்தா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றார்.  

அதன் காரணமாக வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் ஆவேஷம் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 7வது படமாக இப்படம் இருக்கிறது. இதற்கு முன்பாக மஞ்சும்மல் பாய்ஸ்,  2018 , புலிமுருகன், ஆடுஜீவிதம், பிரேமலு, லூசிஃபர் உள்ளிட்ட படங்கள் இணைந்தது. 

fahad faasil aavesham movie enters 100 crore club

சமீப காலமாக மலையாள சினிமாக்கள் கேரளாவைத் தாண்டி மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட்படங்களாக வெளியாகி வருகிறது. இந்த ஹிட் லிஸ்டில் தற்போது ஆவேஷமும் இணைந்துள்ளது. அதோடு ஃபகத் ஃபாசில் நடித்த முதல் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.