Skip to main content

பிரம்மாண்ட படம் - புதிய முயற்சி எடுத்த கீர்த்தி சுரேஷ்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
keerthy suresh dubbed bujji in kalki ad 2898 movie

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கெனவே பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

keerthy suresh dubbed bujji in kalki ad 2898 movie

இந்த நிலையில் இப்படத்தின் புஜ்ஜி என்ற பெயரில் பிரபாஸின் நண்பனாக அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. அதோடு புஜ்ஜியின் மூளை அதன் உடல் வடிவத்துடன் கூடவே இணைந்த வித்தியாசமான உருவத்தில் உள்ளது, அதன் அறிமுக வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரபாஸின் நண்பராக வரும் புஜ்ஜி, அவருக்கு நிறைய அறிவுரைகளை வழங்குகிறது. இருவருக்கும் இடையிலான நட்பை விவரிக்கும் விதமாக இந்த அறிமுக வீடியோ உருவாகியுள்ளது. இதில் சிறப்பம்சமாக புஜ்ஜி ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதன் அறிமுக விழா ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் முன்பு நடந்தது. 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா, கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் ’புது மெட்ரோ ரயில்...’ பாடல் மூலமாக பாடகராக உருவெடுத்தார். இப்போது முதல் முறையக மற்றொரு கதாபாத்திரத்திற்கு அதுவும் ரோபோவுக்கு குரல் கொடுத்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் கீர்த்தி சுரேஷை வைத்து மகாநதி படத்தை இயக்கியவர். இந்தப் படம் கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கவனம் ஈர்க்கும்‘கல்கி 2898 ஏ டி; வைரலாகும் ட்ரைலர்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Kalki 2898 AD trailer is going viral

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 ஏ டி' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ட்ரைலர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்து கொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் ட்ரைலரை  வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ''இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story

“இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி” - ஸ்ருதிஹாசன்

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
shruthi hassan about kamal in at indian 2 audio launch

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியிட்டு விழா, கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னை உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

இதில் கமல், ஷங்கர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார். இதில் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களைத் தொகுத்து அதைத்தன் இசை மற்றும் நடனத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். இந்தத் தருணத்தை தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன்,  ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும்தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார். இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர். நடிப்பில் ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.