Skip to main content

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கவின் படக்குழுவின் முடிவு!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

lift

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்தபோதிலும், கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் ரிலீசில் சிக்கல் இருந்தது. இதற்கிடையே, ‘லிஃப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் பரவ ஆரம்பிக்க, இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கைப்பற்றியிருந்த லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இத்தகவலை மறுத்ததோடு, ‘லிஃப்ட்’ திரைப்படம் திரையரங்கில்தான் வெளியாகும் என உறுதியளித்தது.

 

இத்தகைய சூழலில்தான், ‘லிஃப்ட்’ படத்தின் தயாரிப்பளருக்கும் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பும் மாறிமாறி அறிக்கை வெளியிட்ட நிலையில், ‘லிஃப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி ‘லிஃப்ட்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ள ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் ட்ரைலர் நாளை (24.09.2021) வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

 

‘லிஃப்ட்’ பட வெளியீடு தொடர்பாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு திரையரங்கில் படத்தைக் காணும் ஆவலோடு இருந்த கவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலியுடன் கை கோர்க்கும் கவின்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

kavin marriage update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

 

Next Story

கவின் நடிக்கும் அடுத்த படம்; இயக்குநராகும் நடன இயக்குநர்?

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

kavin next movie update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். 

 

இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் இப்படத்தை தயாரிப்பதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

நடன இயக்குநர் சதீஷ் உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது.