
கார்த்தி தற்போது வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றைக் கைவசம் வைத்துள்ளார். இதில் வா வாத்தியார் படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
வா வாத்தியார் படத்தை நலன் குமாரசாமி இயக்க கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதில் போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றிருந்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் படத்தின் டீசர் வெளியானது. அதை பார்க்கையில் எம்.ஜிஆர். ரசிகராக கார்த்தி நடித்துள்ளது போல் தெரிகிறது. இதையடுத்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘உயிர் பத்திக்காம’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடல் கார்த்திக்கும் க்ரித்தி ஷெட்டுக்கும் இடையிலான ஒரு ஜாலியான பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை விவேக் எழுதியிருக்க விஜயநாராயணன், ஆதித்யா ரவீந்திரன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.