/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/173_23.jpg)
கிரிக்கெட்டை மையமாக கொண்டு தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்கள் பாராட்டி இருந்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் இப்படத்தை பார்த்து பாராட்டினர். மேலும் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், ராஜு முருகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
இந்த நிலையில் கார்த்தி, லப்பர் பந்து படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “தேவி தியேட்டரில் லப்பர் பந்து படத்தை பார்த்தேன். மனம் நிறைந்த அருமையான பொழுதுபோக்கு திரைப்படம். சிறப்பான நடிப்புடனும் டயலாக்குடனும் நிறைய காட்சிகள் இருந்தது. படக்குழுவிற்கு வாழ்த்துகள் மற்றும் மகிழ்வித்ததற்கு நன்றி” என்று கூறியுள்ளார். கார்த்தி நடிப்பில் கடந்த 27ஆம் தேதி வெளியான மெய்யழகன் படமும் திரையரங்கில் தற்போது திரையிட்டு வருகிறது குறிபிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)