karthi 27 update sri divya as heroine

'ஜப்பான்' படத்தைத்தொடர்ந்து கார்த்திதற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வந்தார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

கார்த்தியின்27வது படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ எனத்தலைப்பு வைக்கப்பட்டதாகத்தகவல் வெளியானது. மேலும் ஸ்ரீ திவ்யா மற்றும் சின்னத்திரை நடிகை ஸ்வாதி கொன்டே இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்ரீ திவ்யா கார்த்தியுடன் காஷ்மோரா படத்திற்குப் பிறகு மீண்டும் நடித்துள்ளார்.

Advertisment