/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/329_2.jpg)
அமெரிக்காவில் உள்ள புவேர்ட்டோ தலைநகரில் நேற்று முன்தினம் உலக அழகிப்போட்டி(மிஸ் வேர்ல்ட்) நடைபெற்றது. இதில் போலந்து நாட்டைச்சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகிப்பட்டம் வென்றார். நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் படித்து வரும் கரோலினா பைலாவ்ஸ்கா மாடல் அழகியாகதொடரவும், எதிர்காலத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பை படிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த உலக அழகிப்போட்டியில் அமெரிக்காவில் வாழும் இந்தியரான ஸ்ரீ சைனி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை பூர்வீகமாகக் கொண்டவர். இருப்பினும் ஸ்ரீ சைனி உலக அழகிப்போட்டியில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மானசா வாரணாசி 13ஆவது இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)