kanguva new release date update

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீஸர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. இவ்விரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலையில் வெளியான ‘ஃபயர் சாங்...’ எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

Advertisment

இதையடுத்து கடந்த மாதம் படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படி அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த படக்குழு அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வருவதால், அந்த தேதியில் படம் வெளியாகவில்லை என சமீபத்தில் நடந்த கார்த்தியின் மெய்யழகன் பட இசை வெளியீட்டில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புது ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கங்குவா புது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 14 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment