Skip to main content

‘அன்பே சிவம்’ படத்தின் தயாரிப்பாளர் காலமானார்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

kama, vijay movie producer Muralidharan passes away

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் (அன்பே சிவம்), விஜய் (பகவதி) , சூர்யா (உன்னை நினைத்து) உள்ளிட்ட பலரின் படங்களைத் தயாரித்த நிறுவனம் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான முரளிதரன் சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். இது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

 

தமிழில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த அவரது நிறுவனம் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தைத் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.