/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/657_17.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக்குழு இறங்கியுள்ளது. அந்தவகையில்படக்குழு ஃபேன் பாய் மொமென்ட் என்ற வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவரைஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமாஎன்று ஏங்கும் ரசிகர்களுக்கு நேரில் வந்துசர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அவரைபார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)