Kalanithi Maran met rajinikanth and handed over a cheque, celebrating the historic success of  Jailer

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 525 கோடி வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை பெற்றுள்ளதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.