'Kaduvetti' Teaser Released

'விசித்திரன்' படத்தை தொடர்ந்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'காடுவெட்டி' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள், கொஞ்சம் குடும்ப பாசம் நிறைந்து வெளியாகியிருக்கும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பா.ம.க-வை சார்ந்த மறைந்த காடுவெட்டி குரு-வின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment