Skip to main content

கண்மணியா, கதீஜாவா...? குழப்பத்தில் விஜய் சேதுபதி 

 

Kaathuvaakula Rendu Kaadhal Teaser released

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

ad

 

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு கதாநாயகிகளை காதலிக்கும் ரோமியோவாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு உரித்தான காமெடி காதல் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் பிரபு, விஜய் சேதுபதியை பார்த்து கண்மணி வேணுமா இல்ல கதீஜா வேணுமா எனக் கேட்பார். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி கொடுக்கும் ரியாக்சன் ரசிகர்களை கவரும்படி உள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.