Skip to main content

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா இணைந்து நடித்த படம்?

 

Kaathu Vaakula Rendu Kadhal

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தியது. அங்கு முழுவீச்சில் நடந்து வந்த படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின், இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.