பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது, பி.அருமைச்சந்திரன் தயாரித்து, டி. ரங்கநாதன் இயக்கியுள்ள படம் 'ப்ளூவேல்'. பூர்ணா முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்சார் குறித்து பேசியபோது....
''யூடியூபில் பாலியல் ரீதியான வக்கிரமான விஷயங்கள் வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது. நான் சென்சார் போர்டை பார்த்து கேள்வி கேட்கிறேன். நாங்கள் திரைப்படங்கள் எடுக்கும்போது கொஞ்சம் வரம்பு மீறினாலும் அதை வெட்டு, இதை வெட்டு என்று சொல்கிறீர்கள். அதையே ஏன் உங்களால் யூடியூபில் நடக்கும் அநியாங்களுக்கும் , டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் நடிக்கும் அக்கிரமத்திற்கும் செய்ய முடியவில்லை...? சமுதாயத்தை இவையெல்லாம் அழித்துக்கொண்டிருக்கின்றன. இந்த அழிவில் இருந்து சமுதாயத்தை காக்கவேண்டியது நம் கடமை'' என்றார்.