Jr NTR donates Rs 12.5 lakh to temple

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30ஆவது படமான தேவாரா படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன் 'வார் 2' படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா செய்யேறுவில் உள்ள ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திர சாமி கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக அவர், உதவியதாக கூறப்படுகிறது. மே 20ஆம் தேதி ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் காணும் நிலையில் அதை முன்னிட்டு இந்த உதவியை அவர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இதற்கு முன்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், திரைப்படத் துறையில் தினசரி கூலித் தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக கொரோனா நெருக்கடி அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சமும் ஜூனியர் என்.டி.ஆர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.