jiiva agathiya new release date

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அகத்தியா’.வேல்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் பிப்ரவரி 28 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது.

Advertisment

இப்படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது பாடல் அண்மையில் வெளியானது. இப்படம் இன்று(ஜனவரி 31) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் விரிவான வி.எஃப்.எக்ஸ். வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுவதாக சொல்கிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பிப்ரவரி 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.