Skip to main content

தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி 

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
jhanvi

 

 

 

'தடக்' படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமான ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் அடுத்ததாக கரன் ஜோகர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படதில் ஜான்வி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ஜான்வி தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டு தமிழ் பட இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாகவும், அதற்கு ஜான்வி தரப்பில் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான் இந்தியா படம் - சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jhanvi kapoor to play opposite for suriya in karna movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இப்படம் பான் இந்திய படமாக இரண்டு பாகங்களில் உருவாவதாகவும் மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

jhanvi kapoor to act south indian movies soon

 

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 இல் இந்தியில் வெளியான 'தடக்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களில் 'குஞ்சன் சக்ஸேனா' மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

கடைசியாக ஜான்வி நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தென்னிந்தியப் படங்களின் இந்தி ரீமேக். 'கோலமாவு கோகிலா' படம் 'குட் லக் ஜெரி' என்றும் 'ஹெலன்' என்ற மலையாளப் படம் 'மிலி' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

 

இந்த நிலையில், ஜான்வி கபூர் தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அது எந்த மொழிப் படம் என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் அறிமுகமான படம் 1967 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் 'கந்தன் கருணை'. பின்பு தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.