jayam ravi pan india movie under vels production update

Advertisment

ஜெயம் ரவி, தற்போது அந்தோணி பாக்யராஜ் இயக்கும் 'சைரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனிடையே அஹமத் இயக்கும் 'இறைவன்' படத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 18 மொழிகளில் வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. 'ஜீனி' என்ற தலைப்பில் புவனேஷ் அர்ஜுனன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. மேலும் பட போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25வது படமாக உருவாகிறது. ஏற்கனவே தகவலில் கூறப்பட்டது போல 'ஜீனி' என்ற தலைப்பில் புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். மேலும் கீர்த்தி ஷெட்டி கமிட்டாகியுள்ள நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷனும் படத்தில் நடிக்கிறார். மேலும், ‘மாலை நேரத்து மயக்கம்’ மற்றும் அண்மையில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ மூலம் கவனம் ஈர்த்த வாமிகாவும் நடிக்கிறார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.