Skip to main content

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

jayam ravi new film with kiruthiga udhayanidhi direction

 

ஜெயம் ரவி, தற்போது அந்தோணி பாக்யராஜ் இயக்கும் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

இதனிடையே அஹமத் இயக்கும் 'இறைவன்' படத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 18 மொழிகளில் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. 'ஜீனி' என்ற தலைப்பில் புவனேஷ் அர்ஜுனன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்