Skip to main content

ஜெயிலர் வெற்றி; 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

jailer success sun pictures helped 100 under privileged children for heart surgery

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது.

 

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து சமீபத்தில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை அளித்து பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் பரிசாக இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினிகாந்த்திடம் காட்டி ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுமாறு சொல்ல, பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்வு செய்தார் ரஜினி.

 

ரஜினியைத் தொடர்ந்து நெல்சனை சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் (Porsche) கார் ஒன்றை பரிசளித்திருந்தார். இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் காரை பரிசாக வழங்கினார். இப்படித் தொடர்ந்து பரிசுகளை வழங்கி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது குழந்தைகளுக்கு பண உதவி செய்துள்ளது.100 ஆதரவற்ற குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இதன் காசோலையை அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்