/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/google_2.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினாலும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
இதையடுத்து2021ஆம்ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில்‘ஜெய் பீம்’ படம்இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியானஷெர்ஷா திரைப்படம் இரண்டாவது இடத்தையும், சல்மான் கான் நடிப்பில் வெளியான ராதே திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 6 வதுஇடத்தை பிடித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)