Skip to main content

சைக்கோ கொலைகாரனாக மாறும் ஜெய் !

Published on 12/11/2021 | Edited on 13/11/2021

 

jai play psycho killer in next movie

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஜெய், சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'கேப்மாரி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் 'சிவ சிவா' படத்தில் நடித்து வருகிறார்.  இதில் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.   இப்படத்தின் 'அம்மம்மா' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இதனிடையே இயக்குநர் பத்ரி இயக்கும் புதிய படத்தில் ஜெய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹனிரோஸ் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். க்ரைம் தில்லார் ஜானரில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு விரைவில் படத்தின் தலைப்பை வெளியிட உள்ளதாக  கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரண்மனை 4’ - ரிலீஸ் அப்டேட் சொன்ன குஷ்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sundar c aranmanai 4 release update

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில், அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்த மாதமான ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

நயன்தாரா, ஜெய் மீது வழக்கு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
case against nayanthara and jai in mumbai

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாத 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாத 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இந்த நிலையில் மத உணர்வை புண்படுத்தும் விதமாக இப்படம் இருப்பதாக குறிப்பிட்டு மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக இருக்கிறது” என குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீஸார், நயன் தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.