jai label web series people perspective

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத்தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்க மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

Advertisment

இந்த சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல்திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில், படக்குழு சார்பில் வெளியிட்ட வீடியோ தற்போது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வீடியோ, படத்தின் தலைப்பான லேபில் என்ற வார்த்தைக்கு வட சென்னையில் வசிக்கும் மக்களின் பார்வைக்கும் மற்ற பகுதியின் மக்களின் பார்வைக்கும் உள்ள வேறுபாடுகளை விவரிக்கிறது. மற்ற பகுதியில் வாழும் மக்கள், நோட்டுகளில் ஒட்டும் லேபில் மற்றும் துணிகளில் ஒட்டும் லேபில் உள்ளிட்டவை தான் எங்களுக்குத்தெரிந்த லேபில் என்று கூறுகிறார்கள். அதே வேளையில் வட சென்னை மக்கள், "அதிக பொருளாதாரம், அரசியல் பின்புலம் எல்லாமே இருந்தால் தான் ஒருவன் லேபில் ஆக முடியும்" எனச் சொல்கிறார்கள்.