jai Label web series motion poster released

தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தும்,'கபாலி' உள்ளிட்ட சில படங்களில்பாடியும் உள்ளார்.

Advertisment

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். 'லேபிள்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரிஸில், ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப்பும் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய் நடிப்பில் கடைசியாக 'தீராக் காதல்' படம் வெளியானது. இதையடுத்து நயன்தாராவின் 75வது படம், உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.