Skip to main content

ஹீரோவாக அறிமுகமாகும் மணிகண்டன்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

jai bhim fame Manikandan debuts as the hero

 

விக்ரம் வேதா, காலா, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் மணிகண்டன். மேலும் விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.  மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார். 

 

இந்நிலையில் மணிகண்டன் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். மேலும் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 

இப்படம் 'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் உருவாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சென்னையைச் சுற்றி ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஆந்தாலஜி ஜானரில் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' படத்தின் ஒரு பகுதியில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்தகம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Atharva , Manikandan Mathagam release date announced

 

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப் சீரிஸை, இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் ராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 

 

இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், அண்மையில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது வரை யூட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

 

இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாகிறது. 

 

 


 

Next Story

முன்னாள் அமைச்சர் vs ஒன்றிய செயலாளர்; அதிமுகவினரிடையே மோதல் 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Clash between aiadmk Manikandan and MaruthuPandian supporters

 

அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும், ஒன்றியச் செயலாளர் மருது பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷம் போடுவது, விசில் அடிப்பதில் மோதல் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிதடியாக மாறியது. இருதரப்புக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தகராற்றில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய மாவட்டச் செயலாளர் முனியசாமி, “உட்கட்சி பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பொது இடத்தில் தகராற்றில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.