/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1072.jpg)
‘ஒத்த செருப்பு அளவு 7’படத்திற்குப்பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரேஷாட்டில்படமாக்கப்பட்டுள்ளது. நான்லீனியர்திரைக்கதை முறையில்சிங்கிள்ஷாட்டில்எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில்வரலக்ஷ்மிசரத்குமார்,ரோபோஷங்கர்ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சமீபத்தில்வெளியான இப்படத்தின்ட்ரைலர்ரசிகர்களிடையேநல்லவரவேற்பைப்பெற்றது.
இப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலகாரணங்களுக்காகப்படத்தின்ரிலீஸ்தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதியரிலீஸ்தேதியை நடிகர் தனுஷ்போஸ்டருடன்வெளியிட்டுள்ளார். அதன்படி இரவின் நிழல் திரைப்படம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)