/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/225_3.jpg)
'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சில பிரச்சனைகளால் தடைப்பட்டுப் போனது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'இந்தியன் 2' படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் படம் தொடர்பாக பிரபல ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார். மைக்கேல் வெஸ்ட்மோர், கமலின் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' உள்ளிட்ட படங்களில் ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர். இந்த படங்களை தொடர்ந்து தற்போது 'இந்தியன் 2' படத்திலும் பணியாற்றவுள்ளார். அப்போது மைக்கேல் வெஸ்ட்மோரின் மகள் மெக்கென்சி வெஸ்ட்மோர் உடன் இருந்தார்.
அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மெக்கென்சி வெஸ்ட்மோர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "உலகில் உள்ள இரண்டு இனிமையான மனிதர்களுடன் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவர் எனது அப்பா, மற்றொருவர் கமல்ஹாசன் (அவரும் குடும்பத்தில் ஒருவர்). நீங்கள் இதுவரை பார்க்கவில்லை எனில், கமலின் புதிய படமான விக்ரம் படத்தை பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)