Skip to main content

ரஜினிகாந்துடன் இளையராஜா திடீர் சந்திப்பு

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

ilaiyaraaja met rajinikanth

 

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது  உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட  பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் சமீபத்தில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியதோடு, பொது வெளியில் விவாதத்திற்கும்  உள்ளானது.

 

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். இளையராஜா வரும் ஜூன் 2ஆம் தேதி தனது 79 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக இளையராஜா கலந்து கொள்ளும்  கோவை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் இளையராஜா ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தெய்வீக இருப்பு” - இளையராஜா குறித்து பிரபல இசையமைப்பாளர் நெகிழ்ச்சி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
devi sree prasad about ilaiyaraaja

தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். கடந்த வருட தேசிய விருது விழாவில் புஷ்பா படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது வாங்கினார். இப்போது புஷ்பா இரண்டாம் பாகம் உள்பட சில தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். 

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவிற்கு இளையராஜா சென்றுள்ளார். இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத் அது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்நாள் கனவு நனவான தருணம். சிறு குழந்தையாக இருந்த நான், இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்கு ஒரு மாயாஜால மந்திரத்தை உண்டாக்கியது. நான் தேர்விற்கு படிக்கும் போது கூட, எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசை இருந்து கொண்டே இருக்கும். அவரது இசையுடன் தான் வளர்ந்தேன். அவருடைய இசையில் என்றென்றும் நான் இருப்பேன். அது ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற விருப்பத்தையும் உறுதியையும் வலுவாக என்னுள் விதைத்தது.

நான் இசையமைப்பாளராக மாறியதும், எனது ஸ்டுடியோவை உருவாக்கிய போது, இளையராஜா சாரின் ஒரு பெரிய உருவப்படத்தை வைத்தேன். இளையராஜா சார் ஒரு நாள் எனது ஸ்டுடியோவிற்கு வருகை தர வேண்டும், அவருடைய உருவப்படத்திற்கு அருகில் நின்று நான் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும். இதுவே எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு. நமது ஆசைகளை நனவாக்க யுனிவர்ஸ் எப்போதும் சதி செய்வதால், இறுதியாக எனது கனவு நனவாகியது, குறிப்பாக எனது குரு ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணாவின் பிறந்த நாளில்.

நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். தெய்வீக இருப்பை எனது ஸ்டுடியோவிற்குள் கொண்டு வந்து என்னையும் எனது குழுவையும் ஆசீர்வதித்த இளையராஜாவிற்கு நன்றி. எப்பொழுதும் எங்களை ஊக்குவித்து கற்பித்ததற்கு நன்றி சார். இந்த சந்தர்ப்பத்தில், எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இசை லேபிள்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழுவிற்கு எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் என் இசையை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய விருது வாங்கிய பின்பு இளையாராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அம்பானி இல்லத் திருமண விழா; மெய்சிலிர்த்த ரஜினி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
rajinikanth about ambani family pre wedding

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

கோலிவுட்டிலிருந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜாம் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நிதாவும் முகேஷ் அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் கைலாசத்தையும் வைகுண்டத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளது போல் உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.