உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி இந்திய ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது. குல்தீப் மற்றும் சாஹல் ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. 337 ரன்களை அடித்த அந்த அணி 338 என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி ரன்கள் எடுக்க திணறிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி காவி மற்றும் கரு நீலம் நிறத்தில் புதிய ஜெர்ஸியை அணிந்து ஆடியது. புதிய ஜெர்ஸியை பலரும் விமர்சித்து வந்தனர். நேற்றையை தோல்விக்கு இந்த புதிய ஜெர்ஸியும் ஒரு காரணம் என்று பலரும் விமர்சித்தனர். காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபாவும் இதே கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காலா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்த ஹுமா குரேஷியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “இது மூடநம்பிக்கையெல்லாம் இல்லை. ஆனால், தயவுசெய்து மீண்டும் ப்ளூ ஜெர்சியே வேண்டும், அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.