publive-image

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கொண்டு இயக்கியதிரைப்படம் வாழை. இப்படத்தை மாரிசெல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தாயாரித்துள்ளர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிடோரின் நடிப்பை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் இப்படம் வெளியாவதற்கு முன்னர் நடந்த இப்படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மிஷ்கின், நெல்சன், ராம் உள்ளிட்ட பல இயக்குநர்களும் துருவ் விக்ரம், அனுபமா பரமேசுவரன் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் பாராட்டியிருந்தனர். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இப்படம் பார்த்து பாராட்டியவர்களின் காணொளியை வரிசையாக வெளியிட்டு வந்தார். அதில் பாலா, மணிரத்னம் உள்ளிட்ட இயகுநர்கள் காணொளிகள் இணையத்தில் வைரலாகியது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்து, நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் காணொளியை மாரி செல்வராஜ் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை பாராட்டி பேசிய காணொளியை பகிர்ந்துள்ளார். அதில் பிரதீப் பேசுகையில்,“வாழை படம் பார்க்க பார்க்க மாரிசெல்வராஜ் மீது மரியாதை கூடிக்கொண்டே போனது. இந்த கதை அவர் வாழ்க்கையில் நடந்தது என்று நினைக்கும்போது, இவர் எங்கிருந்து எங்கே வந்துள்ளார் என்பது மிகவும் வியப்பாகவுள்ளது. படம் பார்க்கும்போது அந்த மாதிரியான இடத்திலிருந்து எப்படி மாரி செல்வராஜ் சினிமாவினுள் வந்தார் என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். பேச வார்த்தைகளே வரவில்லை. அந்தளவிற்கு சினிமாவை கற்றுக்கொண்டு அவர் வாழ்க்கையில் நடந்ததை காட்சிப்படுத்தியுள்ளார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.