
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப்ஹாப் தமிழா என்னும் ஆதி, தற்போது 'மீசையை முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார்.
தற்போது கரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் எதுவும் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி மாணவர்களுடன் வீடியோ நேர்காணல் மூலம் கலந்துரையாடிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு 'தமிழி' ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கரோனா காலத்தில் மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.