/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/02_108.jpg)
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பி.டி.சார். அவரே இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். அவர் இசையமைக்கும் 25வது படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த மே 24ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.
இதையொட்டி படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில், ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது, “ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின்படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார், அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தப் படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷூட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார், பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷிணி மேடம், எனப் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுகள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)