helicopter is used in the vettaiyan shooting spot

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கூலி எனப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் டைட்டில் டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Advertisment

இதனிடையே சமீபத்தில் வேட்டையன் பட படப்பிடிப்பு மும்பயில் நடந்த நிலையில் அங்கு அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ரஜினி தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் ரஜினிகாந்த் சம்மந்தபட்ட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ஒரு ஹெலிகாப்டர் அப்பகுதிகளில் சுற்றி வருவது கவனம்பெற்றுள்ளது. மேலும் ரஜினி கேரவனிலிருந்து இறங்கி வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.