harris jeyaraj gst case dismissed

இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. தமிழைத் தவிர்த்து மற்ற மொழிகளிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இதனிடையே 2018ஆம் ஆண்டு ஜிஎஸ்டி இணை இயக்குநர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். அதாவது திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதற்காக சரக்கு மற்றும் ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக அனுப்பியிருந்தார். இந்த நோட்டிஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் 2019ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தனது படப்பின் முழுவதும் தயாரிப்பாளகளுகு தயாரிப்பாளர்களுக்கு நிரந்தர பதிப்புரிமை வழங்கிவிட்டதால் தனக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது” என குறிப்பிட்டு தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள நோட்டீஸை ரத்து செய்ய கோரி கேட்டிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பான நோட்டீஸை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம்தான் முறையிட முடியும். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜிஎஸ்டி இணை இயக்குநர் அனுப்பிய நோட்டிஸுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளிக்கலாம். அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம். அவரின் ஆட்சேபணைங்களை பரிசீலித்து 4 வாரங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.