Harris Jayaraj in kamal vinoth movie

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

Advertisment

இதனை முடித்துவிட்டு தனது 233வது படத்திற்காக அ. வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காகத்துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் கமலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இப்படம் அரசியல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது 234வது படத்திற்காக மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தையும் மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தோடு கமலின் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Advertisment

இந்த நிலையில், கமலின் 233வது படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் பணியாற்றியிருந்தார். அதில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் கமலுடன் இணையவுள்ளதாகத்தெரிகிறது.