halitha shameem minmini trailer released

சில்லுக் கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார். இப்போது 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரிக்க எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை 7 வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அந்த ஆண்டே மொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது.

Advertisment

இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரது இசையில் கடந்த ஆண்டு அக்டோபரில் ‘இரு பெரும் நதிகள்...’ என்ற முதல் பாடல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்தின் ட்ரைலரும் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் ட்ரலைரை வெளியிட்டுள்ளார்.

ட்ரைலரில், பைக்கில் இமாலய பயணம் செல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கும் பிரவின் கிஷோர், கலை மீதும் ஆர்வம் கொண்டவராக வருகிறார். அவரை பள்ளிப் பருவத்திலிருந்தே காதலிக்கும் எஸ்தர் அனில், வளர்ந்து பின்பு பிரவின் கிஷோரை தேடி இமாலய பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரவின் கிஷோரை சந்தித்தப் பின், இருவரும் இயற்கை குறித்தும் அறிவியல் குறித்தும் அதிகம் பேசுகின்றனர். அதன் பின்பு அவர்களது பயணம் எங்கே செல்கிறது, அதில் நடக்கும் சுவாரஸ்யங்களை ஒரு ஃபீல் குட் படமாக சொல்லியிருப்பதாக தெரிகிறது. அதற்கேற்ப “இயற்கையால மட்டும் தான் நம்ம வலியைப் போக்க முடியும். இயற்கை கிட்ட சரணடைஞ்சா அது நம்மல பாத்துக்கும்” உள்ளிட்ட சில வசனங்களும் இடம்பெறுகின்றன.

Advertisment