Skip to main content

சர்ச்சைக்கு விளக்கமளித்த குஞ்சன் சக்ஸேனா!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
gunjan saxena

 

 

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு கரண் ஜோகர் தயரித்துள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’.  

 

இதில் குஞ்சன் சக்ஸேனாவாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். நெட்பிளிக்ஸில் நேரடியாக 12ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு அவப்பெயர் தரும் வகையில் படத்தில் சில காட்சிகள் வசனங்கள் இருப்பதாக தணிக்கை வாரியம் தயாரிப்பு நிறுவனத்திடமும், நெட்பிளிக்ஸிடமும் தெரிவித்துள்ளது

 

அதில், “இந்திய விமானப்படை குறித்த நம்பகத்தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தவும், அடுத்த தலைமுறை அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கவும் படம் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தர்மா புரொடக்‌ஷன்ஸ் ஒப்புக் கொண்டது.

 

ஆனால் முன்னாள் விமானப்படை அதிகாரி குஞ்சன் சக்ஸேனாவை பெருமைப்படுத்தும் நோக்கில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் சில காட்சிகளில் இந்திய விமானப்படை பணி சூழல் குறித்து, குறிப்பாக விமானப்படையில் உள்ள பெண்கள் குறித்தும் தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் படை எப்போதும் பாலின பேதமின்றி, ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு சம உரிமை வழங்கி வருகிறது.

 

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் தயாரிப்பு நிறுவனம் அது போன்ற எந்த காட்சிகளையும் நீக்காமல் திரைப்படத்துக்கு முன்னால் மறுப்பு ஒன்றை சேர்த்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் இதுகுறித்து குஞ்சன் சக்ஸேனா தெரிவிக்கையில், “இந்திய விமானப்படையில் எனக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அங்கே இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு இப்போதும் அதே சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான பெண் அதிகாரிகள் இந்திய விமானப்படையில் உருவாகியுள்ளனர். இதை விட மிகப்பெரிய சான்று வேறு எதுவும் தேவையில்லை. அதிகம் மதிக்கப்படும் துறையான இந்திய விமானப்படை மிகுந்து முற்போக்குடன் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. என் சக அதிகாரிகளின் ஆதரவு எப்போதும் எனக்கு இருந்துள்ளது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான் இந்தியா படம் - சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jhanvi kapoor to play opposite for suriya in karna movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இப்படம் பான் இந்திய படமாக இரண்டு பாகங்களில் உருவாவதாகவும் மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

jhanvi kapoor to act south indian movies soon

 

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 இல் இந்தியில் வெளியான 'தடக்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களில் 'குஞ்சன் சக்ஸேனா' மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

கடைசியாக ஜான்வி நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தென்னிந்தியப் படங்களின் இந்தி ரீமேக். 'கோலமாவு கோகிலா' படம் 'குட் லக் ஜெரி' என்றும் 'ஹெலன்' என்ற மலையாளப் படம் 'மிலி' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

 

இந்த நிலையில், ஜான்வி கபூர் தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அது எந்த மொழிப் படம் என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் அறிமுகமான படம் 1967 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் 'கந்தன் கருணை'. பின்பு தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.