Skip to main content

"மன உளைச்சலை உண்டாக்குகிறது" - அறம் பட இயக்குநர் பதில் புகார்

Published on 08/06/2023 | Edited on 09/06/2023

 

gopi nainar complaint against srilanka lady

 

நயன்தாரா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து 'மனுசி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். 

 

அண்மையில் கோபி நயினார் மீது இலங்கையைச் சேர்ந்த சியாமளா என்ற பெண், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். கோபி நயினார் 2018 ஆம் ஆண்டு 'கருப்பர் நகரம்' என்ற தலைப்பில் திரைப்படம் எடுப்பதாகக் கூறி ரூ.30 லட்சம் முன்பணமாகப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.  

 

இந்நிலையில் கோபி நயினார், சியாமளா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சியாமளா புகாருக்கு பதிலளிக்கும் வகையில் இந்த புகாரை கொடுத்துள்ளதாக கோபி நயினார் தெரிவித்துள்ளார். கருப்பர் நகரத்தின் படப்பிடிப்பு திடீரென நின்றுவிட்டது. பின்பு படப்பிடிப்பை தொடர தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அதனால் வரவு, செலவு குறித்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது. நான் வெறும் இயக்குநர் மட்டுமே. எனவே தேவையில்லாமல் சியாமளா என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் என விளக்கமளித்துள்ளார். 

 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோபி நயினார், "இப்படத்தில் நான் வெறும் இயக்குநர் மட்டும் தான். ஆனால் சியாமளா கூறிய புகாரை தொலைக்காட்சியில் பார்க்கும் போது மன உளைச்சலை உண்டாக்குகிறது. என்னுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. அறம் என்ற மக்கள் சினிமாவை உருவாக்கினேன். தொடர்ந்து அதைப்போல உருவாக்குவேன். மக்களின் நீதி பற்றி பேசும் நபராக இருப்பேனே தவிர எதிராக இருக்கமாட்டேன். எந்த மக்களுக்காக கலையை போராட்ட வழியாக மாத்துகிறேனோ அதுவே இப்போது எனக்கு நெருக்கடி தருவதாக உணர்கிறேன்" எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோபி நயினார் இயக்கும் படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து விபத்து

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
accident in gopi nainar shooting spot

நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ஆண்ட்ரியாவை வைத்து இப்போது ‘மனுசி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். இதனிடையே ஜெய்யை வைத்து, ‘கருப்பர் நகரம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ராதிகாவை லீட் ரோலில் வைத்து காலனி என்கிற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருவதாகத் தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு திருவள்ளூர் செங்குன்றத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது  லைட்மேன் சண்முகம் மற்றும் அவருடன் இருந்த ரஞ்சித் என்பவருக்கும் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி எறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பின்பு உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாராம். மேலும் ரஞ்சித் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகப் பேசப்படுகிறது.

Next Story

தொடர் சிக்கலில் ‘கருப்பர் நகரம்’; தவிக்கும் அறம் பட இயக்குநர்!

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

karuppar nagaram movie image in continuous trouble

 

கடந்த 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அறம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், ஏராளமான விருதுகளையும் வாங்கிக்குவித்தது. இதனால், இந்தப் படத்தின் இயக்குநர் கோபிநயினாருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, அறம் 2 எடுக்கப்போவதாகவும், நடிகர் ஜெய் நடிப்பில் கருப்பர் நகரம் என்ற படத்தை எடுக்கப்போவதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் கசிந்து வந்தது. ஆனால், முறையான அறிவிப்புகள் எதுவுமில்லாமல் இருந்தது. பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் மனுஷி என்ற படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

 

இந்நிலையில், இயக்குநர் கோபிநயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வரியா ராஜேஸ் நடிக்கும் கருப்பர் நகரம் என தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து சினிமா ஆர்வலர்களிடம் கேட்டபோது, கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வரையிலும் பணம் தட்டுப்பாட்டால் எடுக்கமுடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து கிடப்பிலேயே கிடந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பளாரான கங்காதர் விஜய் தொடங்கி அனிஷ், மற்றும் ஷாய் வரையிலும் சென்றுள்ளது. ஆனாலும் படம், பணம் பற்றாக்குறையின் காரணமாக மறுபடியும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. 

 

இதற்கிடையில் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு கடன் கொடுத்தவர்கள் தயாரிப்பாளருக்கு மிகுந்த நெருக்கடிகளைக் கொடுத்துள்ளனர். அதன் பிறகு மறுபடியும் இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனாலும் மறுபடியும் பணப்பற்றாக்குறையின் காரணமாக படம் மீண்டும் பாதியிலேயே நின்றுள்ளது. இந்நிலையில், இந்தத் திரைப்பட தயாரிப்பாளர் ஷாய்க்கு கடன் கொடுத்த ரமேஷ் என்பவர், இந்தத் திரைப்படத்தை தானே தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை படத்தின் இயக்குநர் கோபி நயினாரிடமும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தால் நொந்து கிடந்த இயக்குநர் மேலும் வேதனையாகி இருக்கிறார். இதனால் கவலையாக இருந்த இந்தப் படத்தின் இயக்குநர் கோபி நயினாரிடம் சென்ற ரமேஷ், தன்னுடயை பணம் இந்தப் படத்தில் முடங்கி விட்டதாகவும் இதனை மீட்டு எடுக்க வேண்டுமென்றால் இந்தப் படத்தினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியிருக்கிறார். 

 

அதுமட்டுமல்லாமல், இந்த டீலிங்கிற்கு படத்தின் தயாரிப்பாளர் ஷாயும் ஒப்புக்கொடுத்ததாலும், பைனான்சியர் ரமேசின் சூழல் கருதியும் படத்தினை எடுக்க சம்மதித்துள்ளார். அதன் படி, மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அப்போது, தயாரிப்பாளர் ரமேஷிற்கு கடன் வாங்கித் தந்த காரணத்தாலும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியை அறிமுகப்படுத்திய காரணத்தினாலும், படம் எடுக்க தொடங்கியதில் இருந்து இயக்குநர் போடவேண்டிய அனைத்து செட்யூல்களையும் நாகா என்பவரே முடிவுசெய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த இயக்குநர் இங்கு யார் இயக்குநர்?... நீயா ?.. அல்லது நானா?..  என்ற கேள்வியை எழுப்பியதோடு,  இவ்வாறு நடந்துகொள்வதாக இருந்தால், நீங்களே இந்தப் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் என்னை விட்டுவிங்க எனக் கூறி விட்டு, எனக்கென்று ஒரு பெயர் உள்ளது எனவும் அதனை கெடுத்துக்கொள்ள என்னால் முடியாது எனவும் கூறியிருக்கிறார். இதனால் படம் மீண்டும் நின்றுள்ளது. பிறகு இதனைக் கேள்விப்பட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, இயக்குநர் கோபிநயினாரை அழைத்து நீங்க படம் எடுங்க... யாருடைய தலையீடும் இருக்காது.. என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு, மீண்டும் 22 நாள் படம் சூட்டிங் நடந்துள்ளது. 

 

பின்னர், வழக்கம் போல் பணம் பற்றாக்குறையின் காரணத்தால் மீண்டும் படப்பிடிப்பு நின்றுள்ளது. அதன் பின்னர், பணத்தட்டுப்பாட்டால் படத்தை எடுக்காமல் நிறுத்திய தயாரிப்பாளர்களே இயக்குநர்தான் படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் என்ற பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆர்.கே. செல்வமணி, கதிரேசன் உள்ளிட்ட இயக்குநர்கள் முன்னிலையில் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையில் இயக்குநர் கோபி நயினார், நான் படப்பிடிப்பிற்கு செல்ல எப்போது வேண்டுமானாலும் தயாராரக இருக்கின்றேன் எனவும், தயாரிப்பாளர் பணப் பற்றாக்குறையின் காரணமாக சூட்டிங்கை நிறுத்தியதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளர்கள் தனது மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்களே தவிர படப்பிடிப்பை நடத்துவதற்கு எந்த ஒரு வேலையும் இதுவரை செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார். அதன் பிறகு மறுபடியும் படப்பிடிப்பை துவங்க வேண்டுமென பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து சில மாதங்கள் ஆன பிறகும் படப்பிடிப்பைத் தொடங்காமல் தயாரிப்பாளர்கள் இழுத்தடித்துள்ளனர். 

 

அதன் பிறகு மீண்டும் நடந்த பேச்சு வார்த்தையில், இனி மீதமுள்ள படத்தை 1 கோடியில் முடித்துவிட வேண்டும் என பேசியுள்ளனர். அப்போது பேசிய கோபி நயினார், அது எப்படி முடியும்?.. என்றும், 22 நாள் படப்பிடிப்பை 2.5 கோடியில் முடித்துவிட்டு மீதமுள்ள மூன்று பாடல், மூன்று ஃபைட்சீன், 5 ஃபுட்பால் மேட்ஜ் காட்சிகள், சிறை கிளைமேக்கஸ் காட்சிகள் என முக்கியமான காட்சிகளை எப்படி 1 கோடியில் முடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு, இறுதியாக ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதில் ஒன்று இவர்கள் சொல்லும் தொகையில் படத்தை எடுத்துக்கொடுப்பது, இல்லையேல் இயக்குநரே இந்தப் படத்தை எடுத்துக்கொள்வது எனக் கூறி, இதில் ஒன்றை சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். 

 

அப்போது இதற்கு பதிலளித்த இயக்குநர், இந்தப் படத்தை நானே எடுத்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். அதன் பின்னர், இது வரையிலும் எடுக்கப்பட்ட படத்திற்கான செலவு செய்த கணக்கு விபரங்களை இயக்குநர் கேட்டுள்ளார். அப்போது, ஒரு வெள்ளைக் காகிதத்தில் சரியான விபரங்கள் ஏதுமில்லாமல், இவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என எழுதி கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த இயக்குநர் முறைப்படி சரியான விபரத்தோடு கணக்கினை கொடுங்கள் எனவும் இல்லையென்றால் நான் லீகலாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியிருக்கிறார். அப்போது பேசிய தயாரிப்பாளர்கள், மீண்டும் இல்லை.. இல்லை... இந்தப் படத்தினை நாங்களே எடுக்கின்றோம் என கூறியிருக்கின்றனர். மறுபடியும் வேறு வழியில்லாமல், அதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும், படப்பிடிப்பை மறுபடியும் தொடங்காமல் இழுத்தடித்துள்ளனர். இப்படியே இரண்டு மாதங்கள் கடந்தும் படப்பிடிப்பு தொடங்காததால், இயக்குனர் கோபிநயினார் இந்த விவகாரத்தை ஆர்.கே. செல்வமணியிடம் புகாராக எடுத்துச்சென்றுள்ளார்.

 

அப்போது பேசிய ஆர்.கே.செல்வமணி நீங்க இதற்காக காத்து கிடக்கவேண்டாம்.. என்றும், நீங்க வேறுபடம் பன்னுங்க.. என்றும் கூறியிருக்கிறார். அதன் படி இயக்குநரும் இந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டு காலனி என்ற படத்தினை இயக்க தயாராகியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. இதனைக் கேள்வி பட்டதும், கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளர்கள், தங்களது படத்தினை முடித்து கொடுத்து விட்டுத்தான் அடுத்த படத்தினை எடுக்க வேண்டுமென பிரச்சனை செய்துள்ளனர். இதனால் துயரத்தின் உச்சத்திற்கே சென்ற கோபி நயினார், அந்தத் தயாரிப்பாளர்களிடம் சார்... நான் எப்போது வேண்டுமானாலும் தயார் சார்.. நீங்க பணத்தை ரெடி பண்ணிட்டு படப்பிடிப்பைத் தொடங்குங்க சார்.. என கூறியிருக்கிறார். ஆனால், இவ்வளவு கூறிய பிறகும் அந்தத் தயாரிப்பாளர்கள் அதெல்லாம் முடியாது என கூறி, முதலில் காலனி படத்தில் இருந்து நீங்க விலகுங்க என கூறியுள்ளனர். அது முடியாது என இயக்குநர் கூறியதும், அப்படியென்றால் நீங்கள் கருப்பர் நகரம் படத்தில் இந்து விலகுவதாக என்.ஓ.சி மட்டும் கொடுத்துவிட்டு கிளம்புங்க என கூறியுள்ளனர். ஒரு விதத்தில் மிரட்டலாகவும் இது இருந்த காரணத்தால் இயக்குநரும் வேறு வழியில்லாமல், நீங்கள் செய்வது கொஞ்சமும் நியாயமே இல்லை எனக்கூறி விட்டு என்.ஓ.சி கொடுத்து வெளியேறியுள்ளார். 

 

இந்த நிலையில் தான் கோபிநயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வரியா ராஜேஸ் நடிக்கும் கருப்பர் நகரம் என தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த சினிமா விமர்சகர்கள், அது எப்படி.. மிரட்டி என்.ஓ.சி பெற்றுக்கொண்ட இவர்கள் தற்போது இயக்குநர் கோபிநயினார் பெயரை எப்படி போடமுடியும்?.. என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இதனால் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களிடம் கேட்கும் போது, இவ்வாறு கோபிநயினார் பெயரை போடுவது, ஏனென்றால் இந்தத் தயாரிப்பாளர்கள், சில இயக்குனர்களிடம் சென்று இந்தக் கதையை முடித்து கொடுக்கம்படி கேட்டுள்ளனர் என்றும், அதற்கு எந்த இயக்குனரும் படத்தை இயக்க முன்வராத காரணத்தால், வேறு வழியில்லாமல் இவர் பெயரை போட்டு மறைமுகமாக மீண்டும் கோபி நயினாரை இயக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். 

 

அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்திற்கு கருப்பர் நகரம் என தலைப்பு வைத்த போது, இந்த தலைப்பு என்னுடையது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். அதன்பிறகு இந்த வழக்கு நிழுவையிலேயே இருந்தது. பின்னர், இயக்குநர் கோபி நயினார் மீது வழக்கு தொடுத்தவரே இந்தத் தலைப்பை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என சொன்னபிறகே படத்தை தொடங்கியிருக்கிறார். எனவே, இந்த டைட்டில் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், இயக்குநரை மீண்டும் சேர்த்தால் தான் படம் வெளியில் வரும் என்ற நிலை இருப்பதாலும், மீண்டும் இயக்குநர் கோபி நயினாரின் பெயரை சேர்த்திருப்பதாக திரைத்துறை கவுன்சில் வட்டாரத்தில் பேச தொடங்கியுள்ளனர்.