விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (05.09.2024) வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் - ஸ்னேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை ஸ்னேகா ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்த ஸ்னேகா, ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் வித்தியாசமாக ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கியுள்ளார்.