![Get ready for a music release; Kamal film crew excited the fans](http://image.nakkheeran.in/cdn/farfuture/p0q2s2N5Kvk4bPrL4o6q9UmomUQoe8rvURKVm9T5-FM/1652450698/sites/default/files/inline-images/Untitled-9_7.jpg)
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு இப்போஸ்டரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், "விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டிற்கு தயாராகுங்கள்" என குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகிய மூன்று பேரும் இடம்பெற்றுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு மூன்று பேரும் இடம்பெற்றுள்ள இப்போஸ்டர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.