படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் தோன்றி நடித்துவரும் நடிகர் ஜார்ஜ் மரியான் தீபாவளி வெளியீட்டான “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார். காமெடி, குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ள இவர் இப்பட அனுபவம் குறித்தும், கார்த்தி குறித்தும் பேசும்போது...

''கார்த்தி சாருக்கும் எனக்கும் படத்தின் க்ளைமாக்ஸ்ஸில் மட்டும் தான் சீன் வரும். கார்த்தி சார் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா, அவரேதான் படம் முழுக்க ஓட்டியிருக்கார். பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷ்னர் ஆபிஸிலேயே என்பதால் நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். எல்லோருமே அருமையா வேலை பார்த்திருக்காங்க. கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. இரவுல ஷீட் பண்ணுறது மிகப்பெரிய கஷ்டம். அதுவும் அவுட்டோர்ல எவ்வளவு லைட் வைக்க முடியும் சொல்லுங்க. ஆனா படமாக பார்க்கும் போது கைதி அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருக்கு. அதே மாதிரி ரீ ரிக்கார்டிங் சாம் சி எஸ் பின்னிட்டார். மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க. படம் பார்த்துவிட்டு கார்த்தி சார் என்னை கூப்பிட்டு வெகுவாக பாராட்டுனாரு. அவருக்கு பெரிய மனசு'' என்றார்.