Skip to main content

''இது ஒரு பெரிய இழப்பு'' - நடிகை காயத்ரி ரகுராம் இரங்கல்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

gsh


தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படம் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை மேக்னா ராஜ் கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர்.
 


இவர் கன்னட நடிகரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகனான சிரஞ்சீவி சர்ஜாவைக் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பிஸியாக சினிமாக்களில் நடித்து வந்தார் மேக்னா. கடந்த ஜூன் 6ஆம் தேதி மேக்னாவின் கணரான நடிகர் சிரஞ்சீவிக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவைக் காப்பாற்ற முடியவில்லை. 38 வயதான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிரஞ்சீவி சர்ஜாவின் இந்தத் திடீர் மறைவு கன்னட திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரின் மறைவிற்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான 'பிக்பாஸ்' புகழ் காயத்ரி ரகுராம், "மேக்னா ராஜிற்கு எனது மனமார்ந்த இரங்கல். இது ஒரு பெரிய இழப்பு. உங்கள் அன்புக்குரியவர்களை இழப்பது கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று" எனச் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.கவில் புதிய பொறுப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Gayatri Raghuram new responsibility in ADMK

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.கவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக பா.ஜ.க மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார். அதனையடுத்து, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியபோது, அவர் அக்கட்சியில் இணைவார் எனத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.கவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பொய்களை யார் கேட்பார்கள்? காலி ஓ ஜிம்கானா” - காயத்ரி ரகுராம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 'Who listens to lies? Kali O Gymkhana'-Gayatri Raghuram

 

கன்னியாகுமரியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மீனவர்களுக்கு திமுக அரசு என்ன செய்திருக்கிறார்கள் எனச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம் என்றார்கள். கட்டினார்களா?” என செங்கல் ஒன்றை தூக்கிக் காட்டி, “இதுதான் அந்த இரண்டு லட்சம் வீடு. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அவர்கள் கட்டிக் கொடுப்பதாக சொன்ன ஒரு வீடு கூட தமிழகத்தில் இல்லை. அதனால் தான் இந்த செங்கல்” என்றார்.

 

“2026 மார்ச் மாதம் மக்களுடைய பயன்பாட்டிற்கு எய்ம்ஸ் திறக்கப்படும். முதல்வருக்கு பாஜக ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் தேர்தல் வாக்குறுதியில் அதே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஒரு வாக்குறுதி கொடுத்தீர்கள். ஒருவேளை நீங்கள் மறந்திருந்தீர்களா. உங்கள் வாக்குறுதி எண் 54. அந்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என்றால்” என 'அக்ரி யுனிவர்சிட்டி' என எழுதிய செங்கலை மீண்டும் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்.

 

 'Who listens to lies? Kali O Gymkhana'-Gayatri Raghuram

 

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகியது. அதேநேரம் அக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ளவில்லை எனவும் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் அதிருப்தியில் சென்று விட்டார்கள் என காலி சேருடன் கூடிய புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பாஜக கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  காலி சேர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா' எனப் பதிவிட்டுள்ளார்.