Skip to main content

ஷங்கரின் கேம் சேஞ்சர்; கசியப்பட்ட பாடலால் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

 

game changer song leaked producer files a complaint

 

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளுக்கு ரூ. 90 கோடி செலவு செய்துள்ளதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. 

 

இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆவணத்தை சமூக வலைத்தளங்களில் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் லீக்கான பாடலை யாரும் பகிர வேண்டாம் எனப் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.