Skip to main content

”யாஷை இன்று இந்திய சினிமாவே கொண்டாடுது. ஆனால், 8 வருஷத்துக்கு முன்பு...” - தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

G. Dhananjayan

 

ஆறுமுகம் இயக்கத்தில், கமலா ஆர்ட்ஸ் மகேஷ் சி.பி. தயாரித்து நடித்துள்ள படம் ‘கிரிமினல்’. இப்படத்தில் அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கிறார். கிரன் டொர்னாலா ஒளிப்பதிவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “கன்னட சினிமா நிறைய லெஜண்ட்ஸ்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது. பாலுமகேந்திரா, மணி ரத்னம் உள்ளிட்ட நம்முடைய இயக்குநர்கள் பலருக்கு கன்னட சினிமாதான் தொடக்கப்புள்ளியாக இருந்தது. சிவாஜியின் 200ஆவது படம் கன்னட ரீமேக். நாம் அனைவரும் ரசித்த சந்திரமுகி கன்னடப்படத்தின் ரீமேக்தான். அந்த இண்டஸ்ட்ரியில் இருந்து ஆறுமுகம் தமிழுக்கு அறிமுகமாகிறார். அவருக்கு வாழ்த்துகள். கிரிமினல் படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது சிறப்பாக உள்ளது. 

 

நடிகர் யாஷை இன்று இந்திய சினிமாவே கொண்டாடுகிறது. 8 வருடங்களுக்கு முன்பு அவர் பெரிய நடிகரில்லை. தமிழ்ப்படத்தின் ரீமேக்கில்கூட நடித்திருந்தார். பின்னர், கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்த வெற்றி மூலம் இன்று மிகப்பெரிய ஸ்டாராகிவிட்டார். இதுதான் சினிமா. எப்போது யாரை உச்சத்தில் கொண்டுபோய் வைக்கும் என்பதை கணிக்கவே முடியாது. நல்ல படங்ளை கொடுத்தால் நம்மை எங்கு வைக்க வேண்டுமோ அந்த இடத்திற்கு சினிமா கொண்டு சென்றுவிடும். அப்படியான ஒரு நல்ல முயற்சியாக இந்தக் கிரிமினல் படம் இருக்கும் என்று நம்புகிறேன். படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்