Published on 08/02/2022 | Edited on 08/02/2022

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியதில் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில் இப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'எஃப்.ஐ.ஆர் படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. எல் கருணாகரன் வரிகளில் நடிகர் சிம்பு பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.