Skip to main content

அருள்நிதி படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

The film crew announced the release update of Arulnithi movie

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதியும் ஒருவர். 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து 'டைரி', 'டி ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் 'தேஜாவு' படத்தில் நடித்துமுடித்துள்ளார். மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வைட் கார்பெட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'பிஜி மீடியா ஒர்க்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.    

 

இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ரிலீஸ் மற்றும் வெளியீட்டு உரிமை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு டிஜிட்டல் மற்றும் வெளியீட்டு உரிமையை 'ஏபி இன்டர்நேஷனல்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வித்தியாசமான க்ரைம் தில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருளுக்குள் அழைக்கும் அருள்நிதி

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Demonte Colony 2  first look and Motion Poster released

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அஜய் ஞானமுத்துவே இயக்கினார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

 

படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. அதனைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதல் பாகத்தில் வருவது போல் கண்ணில் கருவிழி இல்லாமல் தோன்றுகிறார். மோஷன் போஸ்டரிலும் இதே தோற்றத்துடன் தோன்றும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

 

மேலும் 'இருளுக்குள் வரவேற்கிறோம்' என்ற டேக் லைனுடன் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதனால் விரைவில் ரிலீஸ் தேதி உட்பட டீசர், ட்ரைலர் அப்டேட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

Next Story

"ஒரு நல்ல திரைப்படம் சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்" - டி. இமான்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

imman about kazhuvethi Moorkan

 

அருள்நிதி நடிப்பில் ‘ராட்சசி’ பட இயக்குநர் சை. கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியிருந்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருந்த இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். கடந்த மே 26 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

 

இப்படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, "கழுவேத்தி மூர்க்கன், 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியைப் பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜுக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்" என ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். 

 

இப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் டி. இமான் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "50 நாட்களாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கழுவேத்தி மூர்க்கனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

 

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும். ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாகக் கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையைச் செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும்; அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்... கழுவேத்தி மூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.