![A fan who congratulated the hip hop aadhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/sXUbSmqb4fp3LkCuHX2UUeXbFdwKJlXDswozKBC1aGQ/1720598389/sites/default/files/inline-images/hiphopni.jpg)
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியை ரோஹித் ஷர்மா என நினைத்து ரசிகர் ஒருவர் அவரிடம் வாழ்த்து கூறிய நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லண்டன் சென்றிருக்கும் ஆதி பதிவிட்ட அந்த வீடியோவில், ஆதியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அப்போது, அதில் ரசிகர் ஒருவர் ஆதியை கட்டியணைத்து கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பிறகு அவர், உலகக்கோப்பையை வென்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். அதற்கு ஆதி, ‘உலகக்கோப்பை வென்றதற்கு எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நீங்கள் யாரோ என நினைத்து என்னிடம் பேசுகிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த நபர், நீங்கள் ரோஹித் ஷர்மா தான் எனக்கு தெரியும் என்று கூற ஆதி சிரித்தப்படி, ‘நான் ரோஹித் ஷர்மா’ இல்லை என்று கூறி தன்னை பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். உடனே இதனை கேட்ட அந்த நபர், சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். இந்த வீடியோவை ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘ரோஹித் ஷர்மாவா நானு’ என்று கூறி ரோஹித் ஷர்மாவை டேக் செய்துள்ளார்.