திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 80). இவர் உடல் நலக்குறைவால் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயச்சந்திரன் இன்று (09.01.2025) உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்படப் பல மொழிகளில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தெய்வம் தந்த பூவே, சொல்லாமலே யார் பார்த்தது, காத்திருந்து காத்திருந்து, கொடியிலே மல்லிகைப்பூ, தாலாட்டுதே வானம் போன்ற பாட்டுகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. பிரபல பின்னணி பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோதத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.